Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உலகம் முழுவதும் 1 கோடியே 82 லட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு

உலகம் முழுவதும் 1 கோடியே 82 லட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு

By: Karunakaran Mon, 03 Aug 2020 11:37:26 AM

உலகம் முழுவதும் 1 கோடியே 82 லட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு

சீனாவில் உள்ள வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் முதன் முதலாக கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கொரோனா வைரஸ் தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

பல்வேறு நாடுகள் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு மற்றும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். இருப்பினும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில் உலகம் முழுவதும் உள்ள 1 கோடியே 82 லட்சத்து 21 ஆயிரத்து 56 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

corona virus,world,corona death,corona prevalence ,கொரோனா வைரஸ், உலகம், கொரோனா மரணம், கொரோனா பாதிப்பு

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 1 கோடியே 10 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். இருப்பினும் கொரோனா காரணமாக இதுவரை 6 லட்சத்து 90 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள அமெரிக்காவில் 47,63,609 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யபட்டுள்ளது. அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக உள்ள பிரேசிலில் 27,33,677 பேருக்கும், இந்தியாவில் 17,50,724 பேருக்கும், ரஷியாவில் 8,50,870 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Tags :
|