Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா வைரஸ் அடிக்கடி தனது வடிவத்தை மாற்றி கொள்கிறது - ஆய்வில் அதிர்ச்சி தகவல்

கொரோனா வைரஸ் அடிக்கடி தனது வடிவத்தை மாற்றி கொள்கிறது - ஆய்வில் அதிர்ச்சி தகவல்

By: Karunakaran Sat, 26 Sept 2020 7:08:48 PM

கொரோனா வைரஸ் அடிக்கடி தனது வடிவத்தை மாற்றி கொள்கிறது - ஆய்வில் அதிர்ச்சி தகவல்

உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன. மேலும் கொரோனா வைரசின் தன்மை, தோற்றம் உள்ளிட்டவற்றை ஆராய்ந்து அதை தடுப்பதற்கான மருந்தை உருவாக்க பல்வேறு கட்ட சோதனைகள் நடந்து வருகிறது. ஆனால் கொரோனா வைரஸ் மருத்துவ நிபுணர்களுக்கு கடும் சவாலாக உள்ளது.

ஒருவரின் உடலில் நுழையும் கொரோனா வைரஸ் முதலில் நுரையீரலை தாக்குகிறது. பின்னர் மற்ற உறுப்புகளையும் பாதிப்படைய செய்கிறது. கொரோனா வைரசின் தன்மை பற்றி கணிக்க முடியாதபடி உள்ளதாக ஏற்கனவே நிபுணர்கள் தெரிவித்திருந்தனர். தற்போது, கொரோனா வைரஸ் தனது வடிவத்தை அடிக்கடி மாற்றிக் கொள்கிறது என்று தெரிய வந்திருக்கிறது.

corona virus,shape,corona impact,corona death ,கொரோனா வைரஸ், வடிவம், கொரோனா தாக்கம், கொரோனா மரணம்

அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், கொரோனா வைரசின் மரபணுவில் உள்ள கருவமிலத்தின் 5 ஆயிரம் செயல்வரிசை ஆய்வு செய்யப்பட்டது. அதில் வைரஸ் அடிக்கடி தனது வடிவத்தை மாற்றிக்கொண்டு வந்திருப்பதை கண்டறிந்தனர். அந்த உருமாற்றம் மனிதர்களை வைரஸ் இன்னும் விரைவாகவும், எளிதாகவும் தொற்றும் வகையில் அமைந்துள்ளது தெரிய வந்துள்ளது.

மேலும் இந்த ஆய்வில், எந்த ஒரு வைரசும் பரவிக்கொண்டிருக்கும் போது தனது உருவத்தை மாற்றிக்கொள்ளும். பெரும்பாலும் அந்த மாற்றங்களால் மிகப்பெரிய விளைவுகள் ஏற்படாது. கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்ட பிறகும் அந்த மருந்து கொடுக்கும் எதிர்ப்பாற்றலையும் மீறி உடலில் தொற்றும் வகையில் வைரஸ் தன்னை உருமாற்றிக் கொள்ளலாம். அதற்கு ஏற்ப தடுப்பூசியிலும் அடிக்கடி மாற்றங்கள் செய்ய வேண்டி இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|