Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஊழியர்களுக்கு கொரோனா உறுதியானதால் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்ட கவர்னர்

ஊழியர்களுக்கு கொரோனா உறுதியானதால் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்ட கவர்னர்

By: Nagaraj Sun, 12 July 2020 8:13:25 PM

ஊழியர்களுக்கு கொரோனா உறுதியானதால் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்ட கவர்னர்

கவர்னர் மாளிகை ஊழியர்களுக்கு கொரோனா... மஹாராஷ்டிரா கவர்னர் மாளிகையில் பணியாற்றும் 18 ஊழியர்களுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி, தன்னை தானே தனிமைப்படுத்தி கொண்டார்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பில், மஹாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது. நேற்று மட்டும் அங்கு 8,139 பேருக்கு தொற்று உறுதிபடுத்தப்பட்டது. இதனால், பாதிப்பு 2,46,600 ஆக அதிகரித்துள்ளது. 10,116 பேர் உயிரிழந்துள்ளனர். அந்த மாநிலத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியாக மும்பை உள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த, அங்கு பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

isolate,kondar,governor,maharashtra,staff ,தனிமைப்படுத்தி, கொண்டார், கவர்னர், மஹாராஷ்டிரா, ஊழியர்கள்

மும்பையை சேர்ந்த முக்கிய விஐபிக்கள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று நடிகர் அமிதாப்பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா உறுதியானது. இந்நிலையில், மஹாராஷ்டிர மாநில கவர்னர் மாளிகையில் பணியாற்றும் 100 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அதில், 18 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

கவர்னரை நேரில் சந்தித்து பேசும் ஊழியர்களுக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது. இதனையடுத்து, கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி , தன்னை தானே தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.

Tags :
|