Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனாவை கட்டுப்படுத்திய பின்னரே விசாரணை நடத்த வேண்டும்; சீன அதிபர் வலியுறுத்தல்

கொரோனாவை கட்டுப்படுத்திய பின்னரே விசாரணை நடத்த வேண்டும்; சீன அதிபர் வலியுறுத்தல்

By: Nagaraj Mon, 18 May 2020 7:16:30 PM

கொரோனாவை கட்டுப்படுத்திய பின்னரே விசாரணை நடத்த வேண்டும்; சீன அதிபர் வலியுறுத்தல்

கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட பின்னர் தான், எவ்வாறு அது தோன்றியது, பரவியது, கையாளப்பட்டது என உலக அளவில் முழுமையான ஆய்வு நடத்த வேண்டும் என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார அமைப்பின், 73வது உலக சுகாதார கூட்டம் இன்று துவங்கியுள்ளது. இதில், சீன அதிபர் ஜி ஜின்பிங் காணொளி வாயிலாக உரையாற்றினார். அப்போது அவர் தெரிவித்ததாவது:

chinese president,inquiry corona,neutral,control,origin ,சீன அதிபர், விசாரணை கொரோனா, நடுநிலை, கட்டுப்பாடு, தோற்றம்

கொரோனா நோய்த்தொற்று விவகாரத்தில் ஆரம்பம் முதலே நாங்கள், வெளிப்படைத் தன்மையுடனும், பொறுப்புடனும் பணியாற்றி வருகிறோம். கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட பின்னர் தான், எவ்வாறு அது தோன்றியது, பரவியது, கையாளப்பட்டது என, உலக அளவில் முழுமையான ஆய்வு நடத்த வேண்டும்.

இந்த விசாரணை பாரபட்சமின்றி நடுநிலையுடன் நடத்தப்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். கூட்டத்தில், 'கொரோனா நோய்த்தொற்றின் தோற்றம் மற்றும் பரவல் தொடர்பாக, சுயாதீன விசாரணை நடத்த வேண்டும்' என, ஆஸ்திரேலியா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சில நாடுகளும் வலியுறுத்தியுள்ள நிலையில் சீன அதிபர் இவ்வாறு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :