அமைச்சரிடம் புகார் அளித்த கவுன்சிலர்கள்... நெல்லை மேயர் மீது குற்றச்சாட்டு
By: Nagaraj Thu, 16 Mar 2023 6:42:23 PM
நெல்லை: நெல்லை மாநகர மேயர் மீது அமைச்சர் கே.என்.நேருவிடம் திமுக கவுன்சிலர்கள் புகார் அளித்துள்ளனர்.
55 வார்டுகளைக் கொண்ட நெல்லை மாநகராட்சியின் மேயராக சரவணன் இருந்து வருகிறார். இவருக்கு எதிராக 35 போர்க்கொடி உயர்த்திய திமுக கவுன்சிலர்களில் 32 பேர், திருச்சியில் அமைச்சர் கே என் நேருவை சந்தித்து மனு ஒன்றை அளித்தனர்.
அதில் மேயர் சரவணன் தன்னிச்சையாக செயல்படுவதாகவும் கவுன்சிலர்களை மதிப்பதில்லை என்றும் குற்றம் சாட்டியதாகக் கூறப்படுகிறது.
மனுவை பெற்றுக் கொண்ட கே.என்.நேரு இதுகுறித்து பேசி சுமூகமான முடிவு எடுக்க வழிவகை செய்வதாக உறுதியளித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
Tags :
decision |