Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பி.ஏ., பி.எஸ்சி உள்ளிட்ட படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு வரும் ஆகஸ்ட் 5 முதல் நடைபெற உளளது

பி.ஏ., பி.எஸ்சி உள்ளிட்ட படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு வரும் ஆகஸ்ட் 5 முதல் நடைபெற உளளது

By: vaithegi Tue, 02 Aug 2022 6:32:41 PM

பி.ஏ., பி.எஸ்சி உள்ளிட்ட படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு வரும் ஆகஸ்ட் 5 முதல் நடைபெற உளளது

சென்னை: தமிழகத்தில் இந்த கல்வியாண்டில் பொறியியல் படிப்புகளை காட்டிலும் பலரும் கலை, அறிவியல் படிப்புகளில் சேர மிக ஆர்வம் காட்டி வருகின்றனர். தமிழகத்தில் மொத்தமாக 163 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் உள்ளன. அதில் இளங்கலை படிப்புகளுக்கு சுமார் 1 லட்சம் இடங்கள் உள்ளன.

ஆனால் இந்த ஒரு லட்சம் காலியிடங்களுக்கு சுமார் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இந்தாண்டு 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த ஜூலை 20 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதனை அடுத்து தேர்வு முடிவுகள் வெளியான நாளில் இருந்தே தமிழகத்தில் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று கொண்டிருக்கிறது.

consulting,b.a.,b.sc ,கலந்தாய்வு ,பி.ஏ., பி.எஸ்சி

மேலும், 4 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பித்துள்ள நிலையில் 2.94 லட்சம் பேர் கல்லூரி கட்டணம் செலுத்தியுள்ளனர். இந்த நிலையில் தமிழகத்தில் பி.ஏ., பி.எஸ்சி., பி.காம்., பிபிஏ., பிசிஏ உள்ளிட்ட படிப்புகளுக்கு கலந்தாய்வு நடைபெற இருக்கிறது.

இதன் இடையில், கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர நினைக்கும் மாணவர்களுக்கான கலந்தாய்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது, கலை, அறிவியல் கல்லூரிகளில் பி.ஏ., பி.எஸ்சி., பி.காம்., பிபிஏ., பிசிஏ உள்ளிட்ட படிப்புகளில் சேருவதற்கு வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் கலந்தாய்வு நடைபெறும் என்று கல்லூரிக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. மேலும், கலந்தாய்விற்கான தரவரிசைப் பட்டியல் வெளியாகியுள்ள நிலையில் கலந்தாய்வு ஆன்லைனிலேயே நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|