Advertisement

மத்திய அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிடாது

By: Nagaraj Sat, 06 June 2020 2:02:51 PM

மத்திய அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிடாது

தலையிட மாட்டோம்... விமான கட்டண விவகாரத்தில், மத்திய அரசின் கொள்கை முடிவில், நீதிமன்றம் தலையிடாது என டில்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

பயணியர் விமான போக்குவரத்தில், அடுத்த மூன்று மாதங்களுக்கு, குறைந்தபட்ச கட்டணம் முதல் அதிகபட்ச கட்டணம் வரை, மத்திய அரசு நிர்ணயம் செய்யும். அதற்கு மேல், பயணியரிடம் கட்டணம் வசூலிக்க கூடாது என, மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம், கடந்த மாதம், 21ல், உத்தரவிட்டது.

airfare,court,refusal,federal government,will not intervene ,விமான கட்டணம், நீதிமன்றம், மறுப்பு, மத்திய அரசு, தலையிடாது

இதை எதிர்த்து, டில்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்கு வந்தது.

அப்போது, 'தற்போது நிலவும் நெருக்கடி நிலையை சமாளிக்கவே இந்த இடைக்கால ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் கொள்கை முடிவில், நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை' என, நீதிபதிகள் தெரிவித்தனர்.

Tags :
|