Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இன்று இரவு முதல் வரும் 6ம் தேதி அதிகாலை வரை ஊரடங்கு சட்டம் அமுல்

இன்று இரவு முதல் வரும் 6ம் தேதி அதிகாலை வரை ஊரடங்கு சட்டம் அமுல்

By: Nagaraj Wed, 03 June 2020 3:44:51 PM

இன்று இரவு முதல் வரும் 6ம் தேதி அதிகாலை வரை ஊரடங்கு சட்டம் அமுல்

வரும் 6ம் தேதி வரை ஊரடங்கு... நாடளாவிய ரீதியில் இன்று (புதன்கிழமை) இரவு 10 மணி முதல் வரும் 6ம் தேதி அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

அதற்கமைய நாடளாவிய ரீதியில் நாளை மற்றும் நாளை மறுதினமும் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது. அதேநேரம் வரும் 6ம் தேதி அதிகாலை நான்கு மணிக்கு தளர்த்தப்படவுள்ள ஊரடங்கு சட்டம் அன்று முதல் அனைத்து மாவட்டங்களிலும் மறு அறிவித்தல் வரை முன்னர் போன்று இரவு 10 மணி முதல் மறுநாள் அதிகாலை 4 மணி வரை மட்டுமே அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

curfew,amul,till 6th,holidays,domestic affairs ,ஊரடங்கு, அமுல், 6ம் தேதி வரை, விடுமுறை, உள்நாட்டு அலுவல்கள்

ஊரடங்கு அமுல்படுத்தப்படும் காலப்பகுதியில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளுக்கு மதிப்பளித்து ஊரடங்கு சட்டத்தை பின்பற்ற வேண்டும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, நாடளாவிய ரீதியில் ஊரடங்கு அமுல்படுத்தப்படுவதால் நாளைய தினம் அரச அலுவலகங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக, உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ரத்னசிறி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|
|