Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பலவித தளர்வுகளுடன் வரும் ஜுன் 30ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து அறிவிப்பு

பலவித தளர்வுகளுடன் வரும் ஜுன் 30ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து அறிவிப்பு

By: Nagaraj Sat, 30 May 2020 9:17:18 PM

பலவித தளர்வுகளுடன் வரும் ஜுன் 30ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து அறிவிப்பு

வரும் ஜுன் 30ம் தேதி வரை பொது ஊரடங்கு நீட்டிப்பு... கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக புதிய தளர்வுகளுடன் ஐந்தாம் கட்டமாக பொது ஊரடங்கை ஜூன் 30 வரை நீட்டித்து மத்திய இன்று அறிவிப்பு வெளியிட்டது.

கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதை தடுக்கும் வகையில் மார்ச் 24ம் தேதி இரவிலிருந்து நாடு தழுவிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. வைரஸ் பரவல் குறையாததால் அதற்கு பின்னும் மூன்று முறை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இதையடுத்து நான்காம் கட்டமாக புதிய தளர்வுகளுடன் மே 31 வரை ஊரடங்கை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டது.

stage 5,curfew,relaxation,central interior,extension ,5ம் கட்டம், ஊரடங்கு, தளர்வுகள், மத்திய உள்துறை, நீட்டிப்பு

இதில் வைரஸ் பாதிப்பு பகுதிகளை அடையாளம் கண்டு வரையறை செய்வதுபோக்குவரத்தை இயக்குவது போன்ற விஷயங்களில் முடிவு எடுக்கும் அதிகாரத்தை மாநில அரசுகளிடமே கொடுத்துள்ளது.

இந்நிலையில் 4-ம் கட்ட ஊரடங்கு நாளை நிறைவடைய உள்ள நிலையில், 5-ம் கட்டமாக இன்று மத்திய அரசு அன்லாக் 1. 0 என்ற பெயரில் சில புதிய அறிவிப்புகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டது. மேலும் வரும் ஜுன் 30ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Tags :
|