Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பொறியியல் படிப்புக்கான கட் ஆப் மதிப்பெண் இந்த ஆண்டு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொறியியல் படிப்புக்கான கட் ஆப் மதிப்பெண் இந்த ஆண்டு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

By: vaithegi Tue, 21 June 2022 3:11:59 PM

பொறியியல் படிப்புக்கான கட் ஆப் மதிப்பெண் இந்த ஆண்டு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகம்: தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று வெளியிட்டார். இதன் அடிப்படையில் 10ம் வகுப்பு தேர்வெழுதிய மாணவர்களில், 90.07 சதவிதத்தினர் தேர்ச்சியும், 12ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களில், 93.76 சதவீதத்தினர் தேர்ச்சியும் பெற்றுள்ளனர்.

கடந்த மார்ச் – 2020 ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்வில் தேர்ச்சி விகிதம் 92.3% ஆக இருந்த நிலையில், இந்த ஆண்டு 93.76% ஆக அதிகரித்துள்ளது. வழக்கம் போல், மாணவர்களை விட மாணவியர் அதிக அளவு தேர்ச்சிப் பெற்றுள்ளனர். மேலும் கடந்த 2020ஆம் ஆண்டு 450 மதிப்பெண்கள் முதல் 550 மதிப்பெண்கள் வரை 50 சதவீத மாணவர்கள் பெற்றிருந்தனர்.

இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகரித்த போதிலும் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாகவே குறைந்துள்ளது. மதிப்பெண்களைப் பொறுத்து, எந்த படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம் என மாணவர்களும் பெற்றோர்களும் ஆலோசனை செய்து வருகின்றனர். இந்த நிலையில் பொறியியல் கால்நடை மருத்துவ அறிவியல் ,வேளாண் படிப்புகளுக்கான கட் ஆப் மதிப்பெண் குறைய வாய்ப்புள்ளதாக கல்வியாளர்கள் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

score,cut off score engineering course ,மதிப்பெண் ,கட் ஆப் மதிப்பெண் பொறியியல் படிப்பு


மேலும் வேதியியல், கணிதம், இயற்பியல் பாடங்களில் 100 சதவீத தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 2000 த்தை தொடவில்லை. இருப்பினும் வணிகவியல், கணக்குப் பதிவியல் போன்ற பாடங்களில் 100% தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 4000 த்தை தாண்டியுள்ளது.

வணிகவியல் பாடத்தில் 4634 பேரும் ,கணக்குப்பதிவியல் பாடத்தில் 4540 பேரும் 100 சதவீதம் மதிப்பெண் பெற்றுள்ளனர். இதனால், B.com,B.com CA போன்ற படிப்புகளுக்கான கட்-ஆஃப் மதிப்பெண் கணிசமாக உயரும் சூழல் ஏற்பட்டுள்ளது.
அதேபோன்று, அரசு மற்றும் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் வேதியியல், இயற்பியல், கணிதம், தாவரவியல், உயிரியல் பாடங்களுக்கான கட்-ஆஃப் மதிப்பெண்ணும் குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாடங்களில் அதிக அளவு மாணவர்கள் 100 சதவீத மதிப்பெண்கள் பெறாதாதே கட் ஆப் குறைவதற்கு காரணமாக கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர் .

Tags :
|