Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • புதுச்சேரியில் மிலாது நபி பண்டிகை தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது

புதுச்சேரியில் மிலாது நபி பண்டிகை தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது

By: vaithegi Fri, 22 Sept 2023 3:18:48 PM

புதுச்சேரியில் மிலாது நபி பண்டிகை தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது

புதுச்சேரி: மிலாது நபி பண்டிகை வருகிற செப். 28 ஆம் தேதிக்கு மாற்றம் ...இஸ்லாமிய மக்களின் முக்கிய பண்டிகையான மிலாது நபி பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் தமிழக மக்களால் வெகு விமர்சையாக கொண்டாடப்படும்.

இதையடுத்து இப்பண்டிகையானது இறை தூதர் முகமது நபிகள் பிறந்த தினத்தை விழாவாக மக்கள் கொண்டாடுகின்றனர். இந்த ஆண்டு தமிழகத்தில் மிலாது நபி பண்டிகை வருகிற செப். 28 ஆம் தேதி கொண்டாடப்படும் என தலைமை காஜி அறிவித்துள்ளார்.

milad nabi festival,puducherry ,மிலாது நபி பண்டிகை,புதுச்சேரி

ஆனால் புதுச்சேரியில் செப். 27 ஆம் தேதி கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டது. மேலும் செப். 27 ஆம் தேதி அரசினர் விடுமுறை என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது புதுச்சேரியில் செப். 27 ஆம் தேதிக்கு பதிலாக செப். 28 ஆம் தேதி அரசு விடுமுறை என மாற்றி அரசு சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. அன்றைய தினம் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது


Tags :