Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கேரள முதல்வரின் மகளுக்கு எளிய முறையில் இன்று திருமணம் நடந்தது!

கேரள முதல்வரின் மகளுக்கு எளிய முறையில் இன்று திருமணம் நடந்தது!

By: Monisha Mon, 15 June 2020 4:52:40 PM

கேரள முதல்வரின் மகளுக்கு எளிய முறையில் இன்று திருமணம் நடந்தது!

கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்களின் மூத்த மகள் வீணா என்பவரின் திருமணம் மிக எளிமையாக முதல்வர் இல்லத்தில் நடைபெற்றது.

கேரளா முதல்வர் பினராயி விஜயனின் மகளும், தகவல் தொழில்நுட்ப தொழில் முனைவோருமான வீணாவுக்கு இன்று திருமணம் நடந்தது. அவர் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தேசிய தலைவர் முகமது ரியாஸை கரம் பிடித்துள்ளார். இவர்களது திருமணம் இன்று திருவனந்தபுரத்தில் முதல்வரின் இல்லத்தில் எளிய முறையில் நடந்தது. முகமது ரியாஸ் மணமகள் கழுத்தில் தாலி கட்டியபோது சுற்றிலும் இருந்தவர்கள் கைதட்டி மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

kerala chief minister pinarayi vijayan,wedding,mohammed riyaz,veena ,கேரள முதல்வர் பினராயி விஜயன்,திருமணம்,முகமது ரியாஸ்,வீணா

முகமது ரியாஸ் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர் என்பதும், மாணவர் பருவத்திலேயே அரசியலில் ஈடுபாடு கொண்டவர் என்பதும், பல தொலைக்காட்சி விவாதங்களிலும் பல போராட்டங்களிலும் கலந்து கொண்டவர்.

அதுமட்டுமின்றி கடந்த 2009 ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் கோழிக்கோடு தொகுதியில் போட்டியிட்டு வெறும் 800 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் முதல்வரின் மகள் மற்றும் மருமகனுக்கு கேரள அரசியல்வாதிகள் மற்றும் திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Tags :