Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தீபாவளிக்கு அடுத்த நாள் 25 ஆம் தேதி விடுமுறை விட அதிக வாய்ப்பு

தீபாவளிக்கு அடுத்த நாள் 25 ஆம் தேதி விடுமுறை விட அதிக வாய்ப்பு

By: vaithegi Thu, 20 Oct 2022 3:23:39 PM

தீபாவளிக்கு அடுத்த நாள் 25 ஆம் தேதி விடுமுறை விட அதிக வாய்ப்பு

சென்னை: இந்த வருடம் தீபாவளி பண்டிகை திங்கட்கிழமை (அக்.24) வரவுள்ளது. அதற்கு முதல் 2 நாள் பள்ளிகளுக்கு சனி, ஞாயிறு வழக்கமான விடுமுறை நாட்கள் ஆகும். அடுத்த நாள் திங்கட்கிழமை பண்டிகையை முன்னிட்டு அரசு விடுமுறை என்று மொத்தம் 3 நாட்கள் விடுமுறை இந்த ஆண்டு இருக்கிறது.

பிறகு பண்டிகைக்கு அடுத்த நாள் செவ்வாய் கிழமை (அக்.25) வேலை நாளாக உள்ளது. இதனால் சொந்த ஊர்களுக்கு சென்ற மாணவர்கள் தீபாவளி முடிந்த அன்றைய தினமே மீண்டும் வசிக்கும் ஊர்களுக்கு திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது. இது சாத்தியமற்ற ஒன்றாக உள்ளது.

holiday,diwali ,விடுமுறை ,தீபாவளி

மேலும் அனைத்து மக்களும் ஒரே நேரத்தில் ஊர் திரும்புவதால் போக்குவரத்து நெரிசலும் அதிகரிக்கும். இதையடுத்து அத்துடன் பணிக்கு செல்பவர்கள் தீபாவளி மறுநாள் விடுப்பு எடுக்க வேண்டிய சூழல் உருவாகும். அதனால் பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் செவ்வாய் கிழமை (அக்.25) அரசு விடுமுறை அளிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

அதிலும் குறிப்பாக குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர்கள் விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகுமா? என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர். இது குறித்து வெளியான தகவலின் படி தீபாவளிக்கு அடுத்த நாள் 25 ஆம் தேதி விடுமுறை விட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Tags :