Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ரூ.2000 நோட்டை மாற்றிக்கொள்ள கொடுத்த காலக்கெடு இன்றுடன் முடிவு

ரூ.2000 நோட்டை மாற்றிக்கொள்ள கொடுத்த காலக்கெடு இன்றுடன் முடிவு

By: vaithegi Sat, 30 Sept 2023 10:04:45 AM

ரூ.2000 நோட்டை மாற்றிக்கொள்ள கொடுத்த காலக்கெடு இன்றுடன்  முடிவு

இந்தியா: நாடு முழுவதும் புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகள் இன்று வரை மட்டுமே செல்லும் என ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா தெரிவித்து உள்ளது. இதனை அடுத்து நாளை முதல் 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில் வங்கிகளில் மட்டுமே செலுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த 2016 -ம் ஆண்டு 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெற பெற்று 2000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டது. 500, 1000 ரூபாய் நோட்டுகளின் பண மதிப்பு நீக்கத்திற்கு பிறகு 2000 ரூபாய் நோட்டுகள் நாட்டில் புழக்கத்திற்கு வந்தன.

time limit 2000 rupees notes ,காலக்கெடு ,2000 ரூபாய் நோட்டுகள்

கடந்த மே 23-ம் தேதி முதல் பொதுமக்கள் தங்கள் கைவசம் உள்ள 2000 ரூபாய் நோட்டுக்களை செப்டம்பர் 30-ம் தேதிக்குள் இந்திய ரிசர்வ் வங்கியின் அலுவலகங்கள் அல்லது வங்கி கிளைகளில் ஒப்படைத்து , அதற்குரிய பணத்தை வங்கி கணக்கில் வரவு வைத்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது. மேலும் அத்துடன் அக்டோபர் 1-ம் தேதி முதல் 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது.

எனவே இதன் காரணமாக 2000 ரூபாய் தாள்களை வைத்திருப்பவர்கள் வங்கிகளில் அவற்றை செலுத்தி மாற்றிக் கொள்ளும்படி ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது . இக்காலக்கெடு இன்றுடன் முடிவடைகிறது. எனவே வங்கிகளிலோ, ஏடிஎம் டெபாசிட் இயந்திரங்களிலோ செலுத்தி மாற்றி கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :