Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஆதார் எண்ணை, பான் எண்ணுடன் இணைப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவு

ஆதார் எண்ணை, பான் எண்ணுடன் இணைப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவு

By: vaithegi Thu, 30 June 2022 11:02:59 AM

ஆதார் எண்ணை, பான் எண்ணுடன் இணைப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவு

இந்தியா: கடந்த 2017ம் ஆண்டில் மத்திய அரசாங்கம் ஆதார் ஆதார் எண்ணை, பான் எண்ணுடன் இணைக்கும் செயல்முறையை கட்டாயமாக்கி இருந்தது. அதற்காக பொது மக்களுக்கு குறிப்பிட்ட நாட்கள் வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கொரோனா பரவல் பாதிப்புகள், சர்வர் கோளாறுகள் நிமித்தமாக ஆதார் மற்றும் பான் இணைப்பிற்கான கால அவகாசம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது. அந்த வகையில் இறுதியாக ஆதார் மற்றும் பான் இணைப்பிற்கான காலக்கெடுவை ஜூன் 30, 2022 வரை நீட்டித்து மத்திய அரசாங்கம் உத்தரவிட்டது.

அவ்வகையில் ஆதார் மற்றும் பான் இணைப்பிற்கான கால அவகாசம் இன்றுடன் அதாவது ஜூன் 30ம் தேதியுடன் முடிவடைய இருக்கிறது. அதனால் இன்றைக்குள் ஆதார் எண்ணை பான் அட்டையுடன் இணைக்காத ஒவ்வொருவருக்கும் அபராதம் விதிக்கப்பட இருப்பதாக மத்திய அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

period,reference number ,கால அவகாசம்,ஆதார் எண்

மேலும், ஜூன் 30ம் தேதிக்குள் ஆதார், பான் இணைப்பை மேற்கொள்ளாதவர்களுக்கு விதிக்கப்பட்டு வந்த ரூ.500 அபராதம் இனி இரட்டிப்பாக வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, நாளை முதல் ஆதார், பான் இணைப்பை மேற்கொள்ளும் ஒவ்வொரு நபருக்கும் ரூ.1000 அபாரதமதாக வசூலிக்கப்படும்.

உங்கள் பான் எண் ஆதாருடன் இணைக்கப்பட்டதா என்பதை சரிபார்க்க www.pan.utiitsl.com/panaadhaarlink/forms/pan.html/panaadhaar என்ற இணையதளத்துக்கு செல்லவும். அதில் பான் எண், பிறந்த தேதி, கேப்ட்சாக் குறியீட்டு எழுத்துக்களை டைப் செய்து சப்மிட் கொடுத்தால் இது குறித்த விவரங்கள் தோன்றும்.

Tags :
|