Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ரேஷன் கார்டுகள் ஆதார் அட்டையுடன் இணைக்க காலக்கெடு வரும் ஜூன் 30ம் தேதியுடன் முடிவு

ரேஷன் கார்டுகள் ஆதார் அட்டையுடன் இணைக்க காலக்கெடு வரும் ஜூன் 30ம் தேதியுடன் முடிவு

By: vaithegi Thu, 23 June 2022 5:51:39 PM

ரேஷன் கார்டுகள் ஆதார் அட்டையுடன் இணைக்க காலக்கெடு வரும் ஜூன் 30ம் தேதியுடன் முடிவு

தமிழகம்: சமீபத்தில் மத்திய அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட" ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு" திட்டம் மூலம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான உணவு பொருட்களை தடையில்லாமல் வழங்குவதில் அரசாங்கம் மிக கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறது. இதற்காக அனைத்து ரேஷன் அட்டைதாரர்களும் தங்களது கார்டை, ஆதாருடன் இணைக்க வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தி இருக்கிறது.

அந்த வகையில் இப்போது நீங்களும் ரேஷன் கார்டு பயனராக இருந்தால், உங்கள் ரேஷன் கார்டை ஆதாருடன் இணைத்திருக்க வேண்டும். இப்போது ரேஷன் கார்டை ஆதாருடன் இணைப்பதற்கான கடைசி நாள் ஜூன் 30 ஆகும்.

ration cards,aadhar card ,ரேஷன் கார்டுகள், ஆதார் அட்டை

இதற்கு முன், ரேஷன் கார்டை ஆதாருடன் இணைப்பதற்கான காலக்கெடு மார்ச் 31 வரை கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால், இத்திட்டத்தை ஜூன் 30ம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்தது. இப்போது ரேஷன் பயனர்கள் ஆன்லைன் மூலம் தங்களது ரேஷன் கார்டை ஆதார் அட்டையுடன் எப்படி இணைப்பது :

முதலில் ஆதாரின் அதிகாரப்பூர்வ இணையதளமான uadai.gov.in க்கு செல்லவும்.
பிறகு ‘ஸ்டார்ட் நவ்’ என்பதைக் கிளிக் செய்யவும்.
உங்கள் முகவரி, மாவட்டம் மற்றும் மாநிலத்தை நிரப்பவும்.
பிறகு ‘Ration Card Benefit’ என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
இதில் ஆதார் அட்டை எண், ரேஷன் கார்டு எண், மின்னஞ்சல் முகவரி, மொபைல் எண் போன்றவற்றை நிரப்பவும்.
இப்போது உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும்.
அந்த OTPயை நீங்கள் உள்ளிட்டவுடன் திரையில் ‘Process Complete’ என்ற செய்தி வரும்.

Tags :