Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஆசிரியர் தகுதித்தேர்வு ...விண்ணப்பத்தில்‌ திருத்தம் செய்ய கால அவகாசம் இன்றுடன் முடிவு

ஆசிரியர் தகுதித்தேர்வு ...விண்ணப்பத்தில்‌ திருத்தம் செய்ய கால அவகாசம் இன்றுடன் முடிவு

By: vaithegi Wed, 27 July 2022 11:36:45 AM

ஆசிரியர் தகுதித்தேர்வு ...விண்ணப்பத்தில்‌ திருத்தம் செய்ய  கால அவகாசம் இன்றுடன் முடிவு

சென்னை : ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1-க்கு 2 லட்சத்து 30 ஆயிரத்து 878 பேரும், தாள் 2-க்கு 4லட்சத்து ஆயிரத்து 886 பேரும் மொத்தம் 6 லட்சத்து 32 ஆயிரத்து 764 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இதை அடுத்து விண்ணப்பதாரர்கள்‌ தங்களது விண்ணப்பத்தில்‌ திருத்தம்‌ மேற்கொள்ள பல கோரிக்கை மனுக்கள்‌ வந்த நிலையில், அரசு அதை ஏற்று கால அவகாசம் வழங்கியது. ஆனால் அப்போது ஏற்றப்பட்ட தொழில் நுட்ப கோளாறு காரணமாக, தற்காலிகமாக அந்த செயல் முறை நிறுத்தி வைக்கப்பட்டது.

அதை தொடர்ந்து சில நாட்களுக்கு முன், ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 மற்றும் தாள் 2க்கு விண்ணப்பித்தவர்கள் தங்களின் விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள விரும்பினால், ஜூலை 27 ம் தேதி வரை திருத்தம் செய்ய ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வழிவகை செய்தது.

duration,teacher eligibility,result , கால அவகாசம், ஆசிரியர் தகுதித்தேர்வு ,முடிவு

மேலும் விண்ணப்பதாரர்கள் திருத்தங்கள் மேற்கொள்ள அளிக்கும் விண்ணப்பங்கள் மீது ஆசிரியர் தேர்வ வாரியம் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைனில் திருத்தம் மேற்கொள்வதற்கு இன்றே கடைசி நாள் என்பதால், இனியும் கால தாமதிக்காமல் உடனே பதிவுகளை மேற்கொள்ளுமாறு TN TRB தேர்வாணையம் அறிவித்துள்ளது. மேலும் இந்த கால அவகாசம் எக்காரணம் கொண்டும், நீட்டிக்கப்படாது எனவும் தெரிவித்துள்ளது.

Tags :