Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஜேஇஇ முதன்மைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் காலஅவகாசம் டிசம்பர் 4-ம் தேதி வரை நீட்டிப்பு

ஜேஇஇ முதன்மைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் காலஅவகாசம் டிசம்பர் 4-ம் தேதி வரை நீட்டிப்பு

By: vaithegi Sat, 02 Dec 2023 2:41:34 PM

ஜேஇஇ முதன்மைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் காலஅவகாசம் டிசம்பர் 4-ம் தேதி வரை நீட்டிப்பு

சென்னை: மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் ஐஐடி, என்ஐடி போன்ற இளநிலைப் படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் (ஜேஇஇ) தேர்ச்சி பெற வேண்டும். இவை முதன்மை தேர்வு, பிரதான தேர்வு என்று 2 பிரிவாக நடக்கும்.

முதன்மைத் தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் 2 கட்டங்களாக நடத்தி கொண்டு வருகிறது.எனவே அதன்படி, 2024-25-ம் கல்வி ஆண்டுக்கான ஜேஇஇ முதல்கட்ட முதன்மைத் தேர்வு வருகிற ஜனவரி 24 முதல் பிப்ரவரி 1-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதையடுத்து இந்த தேர்வுக்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த நவம்பர் 1-ம் தேதி தொடங்கி 30-ம் தேதி முடிவடைந்தது. இதன் இடையே பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகளை ஏற்று, விண்ணப்பிக்கும் காலஅவகாசம் வருகிற டிசம்பர் 4-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

duration,jee main exam , காலஅவகாசம் ,ஜேஇஇ முதன்மைத் தேர்வு


எனவே விருப்பமுள்ள மாணவர்கள் jeemain.nta.nic.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களில் ஏதேனும் திருத்தங்கள் இருப்பின் வருகிற டிசம்பர் 6 முதல் 8-ம் தேதி வரை மேற்கொள்ளலாம்.

இத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு உள்ளிட்ட தகவல்கள் பின்னர் வெளியிடப்படும். மேலும் கூடுதல் விவரங்களை /nta.ac.in/ என்ற வலைதளத்தில் அறிந்து கொள்ளலாம். தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் சிரமங்கள் இருப்பின் 011-40759000/69227700 என்ற எண் அல்லது [email protected] எனும் மின்னஞ்சல் முகவரிக்கு மாணவர்கள் தொடர்புகொண்டு விளக்கம் பெறலாம் என்று தேசிய தேர்வுகள் முகமை தகவல் தெரிவித்துள்ளது.

Tags :