Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மெக்சிகோவில் கொரோனா காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 51 ஆயிரத்தை தாண்டியது

மெக்சிகோவில் கொரோனா காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 51 ஆயிரத்தை தாண்டியது

By: Karunakaran Sun, 09 Aug 2020 09:20:24 AM

மெக்சிகோவில் கொரோனா காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 51 ஆயிரத்தை தாண்டியது

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல்வேறு நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வந்தாலும், கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது.

தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.97 கோடியைக் கடந்துள்ளது. 7.27 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 1.26 கோடிக்கும் மேற்பட்டோர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். உலகளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் மெக்சிகோ தற்போது 6-வது இடத்தில் உள்ளது.

death toll,corona virus,mexico,corona death ,இறப்பு எண்ணிக்கை, கொரோனா வைரஸ், மெக்சிகோ, கொரோனா மரணம்

மெக்ஸிகோவில் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. மெக்சிகோவில் கொரோனா காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 51 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. மெக்சிகோவில் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4.69 லட்சத்தை தாண்டியுள்ளது.

மெக்சிகோவில் இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து 3.13 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது நாடு முழுவதும் கொரோனா பாதிப்புடைய 1.04 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Tags :
|