Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மெக்சிகோவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 46 ஆயிரத்தை கடந்தது

மெக்சிகோவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 46 ஆயிரத்தை கடந்தது

By: Karunakaran Sat, 01 Aug 2020 12:45:47 PM

மெக்சிகோவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 46 ஆயிரத்தை கடந்தது

கடந்த ஆண்டு சீனாவில் உள்ள வுகான் நகரில் முதன் முதலாக கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் உலகின் 213 நாடுகளுக்கு பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வந்தாலும், நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது.

உலகம் முழுவதும் 1 கோடியே 77 லட்சத்து 45 ஆயிரத்து 626 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 1 கோடியே 10 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உலகளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.

mexico,death toll,corona virus,corona death ,மெக்சிகோ, இறப்பு எண்ணிக்கை, கொரோனா வைரஸ், கொரோனா மரணம்

உலகம் முழுவதும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 6 லட்சத்து 82 ஆயிரத்து 885 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்கா, பிரேசிலுக்கு அடுத்தபடியாக மெக்சிகோவில் வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆயிரத்தை கடந்துள்ளது. மெக்சிகோவில் கொரோனா காரணமாக 46,688 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகளில் அமெரிக்கா முதலிடத்திலும், பிரேசில், மெக்சிகோ, இங்கிலாந்து நாடுகள் அடுத்தடுத்த இடத்திலும் உள்ளன. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புடைய 58 லட்சத்து 47 ஆயிரத்து 455 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags :
|