Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ரஷ்யாவில் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 ஆயிரத்தை நெருங்கியது

ரஷ்யாவில் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 ஆயிரத்தை நெருங்கியது

By: Karunakaran Thu, 20 Aug 2020 2:40:33 PM

ரஷ்யாவில் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 ஆயிரத்தை நெருங்கியது

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மக்களை அச்சுறுத்தி வருகிறது. உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்கம் உள்ளது. கொரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல்வேறு நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வந்தாலும், நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது.

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2.24 கோடியை கடந்துள்ளது. வைரஸ் தொற்றுக்கு இதுவரை 7.87 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில், அமெரிக்கா, பிரேசில், இந்தியாவைத் தொடர்ந்து ரஷ்யா உள்ளது.

corona virus,russia,corona death,corona prevalence ,கொரோனா வைரஸ், ரஷ்யா, கொரோனா மரணம், கொரோனா பாதிப்பு

உலகளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் ரஷ்யா 4-வது இடத்தில் உள்ளது. ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,828 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் அங்கு கொரோனா வைரஸுக்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9 லட்சத்து 37 ஆயிரத்து 321 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு 117 பேர் பலியாகினர். இதனால் அங்கு கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 15 ஆயிரத்து 989 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 7.49 லட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Tags :
|