Advertisement

நிலச்சரிவில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 53 ஆக உயர்வு

By: Monisha Wed, 12 Aug 2020 5:16:23 PM

நிலச்சரிவில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 53 ஆக உயர்வு

நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் இன்று 6 வது நாளாக மீட்பு பணி தொடர்கிறது. அதில் மீண்டும் ஒருவரது உடல் மீட்கப்பட்டது.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே ராஜமலை பெட்டிமுடியில் உள்ள தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வசித்த குடியிருப்பு பகுதியில், கடந்த 7 ந்தேதி அதிகாலை பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.

இதில், குடியிருப்பு பகுதியில் இருந்த 20 வீடுகள் அப்படியே மண்ணுக்குள் புதைந்தன. மேலும் அவற்றில் வசித்த தமிழக தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் 78 பேர் உயிரோடு மண்ணுக்குள் புதைந்தனர்.

kerala,landslide,kills,rescue troops,fire brigade ,கேரளா,நிலச்சரிவு,பலி,மீட்பு படையினர்,தீயணைப்பு படை

நிலச்சரிவை தொடர்ந்து, கேரள தீயணைப்பு படை வீரர்கள், போலீசார் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் என 600 க்கும் மேற்பட்டோர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

கடந்த 5 நாட்களாக நடந்த மீட்பு பணியில் 52 பேர் இறந்த நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டனர். நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் இன்று 6 வது நாளாக மீட்பு பணி தொடர்ந்தது. இந்தநிலையில் நிலச்சரிவில் சிக்கி பலியான மேலும் ஒருவரின் உடல் மீட்கப்பட்டது. இதன் மூலம் நிலச்சரிவில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 53- ஆக உயர்ந்தது.

Tags :
|
|