Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • திப்பு சுல்தான் பற்றிய பாடத்தை நீக்கும் முடிவை வாபஸ் பெற வேண்டும் - சித்தராமையா வலியுறுத்தல்

திப்பு சுல்தான் பற்றிய பாடத்தை நீக்கும் முடிவை வாபஸ் பெற வேண்டும் - சித்தராமையா வலியுறுத்தல்

By: Karunakaran Thu, 30 July 2020 12:45:06 PM

திப்பு சுல்தான் பற்றிய பாடத்தை நீக்கும் முடிவை வாபஸ் பெற வேண்டும் - சித்தராமையா வலியுறுத்தல்

இயேசு கிறிஸ்து, பிரவாதி பைகம்பர், திப்பு சுல்தான், சங்கொள்ளி ராயண்ணா, ராணி அப்பக்கதேவி ஆகியோர் தொடர்பான பள்ளி பாடங்களை நீக்கிய கர்நாடக அரசின் முடிவிற்கு கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதிகாரப்பூர்வமான ஆட்சி பலம் இழந்து வருவதாகவும், சட்டவிரோத சங்பரிவார் அரசு பலம் அடைந்து வருவதாகவும், கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியாத மாநில அரசு, நிலைமையை தவறாக பயன்படுத்தி பாடத்திட்டங்களை காவிமயமாக்கி ரகசிய கொள்கையை அமல்படுத்தி வருவதாகவும் சித்தராமையா குற்றம் சாட்டியுள்ளார்.

chidramaiah,tipu sultan,lesson,karnataka ,சித்தராமையா, திப்பு சுல்தான், பாடம், கர்நாடகா

கர்நாடக பாடத்திட்ட குழு அரசை விட அதிகாரம் கொண்டதா?. பள்ளி பாடத்திட்டத்தில் இருந்து திப்பு சுல்தான் உள்பட வரலாற்றாளர்கள் பற்றிய பாடங்களை நீக்கும் முடிவை உடனடியாக வாபஸ் பெற வேண்டும். இல்லாவிட்டால் அரசின் பங்கை ஒப்புக்கொள்ளுங்கள் என சித்தராமையா தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், கொரோனா முறைகேடுகளை வெளியே கொண்டு வரும் அதிகாரிகளின் தைரியத்தை குறைக்கும் நோக்கில் செயல்படுகிறீர்கள். முதலில் ஊழல்வாதிகளை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பெங்களூரு மாநகராட்சி கமிஷனரை பணி இடமாற்றம் செய்தீர்கள்?. மதவாத சிந்தனை கொண்ட வன்முறையாளர்களை பாதுகாக்க தட்சிண கன்னடா கலெக்டரை பணி இடமாற்றம் செய்துள்ளர்கள். இது தான் உங்களின் கொரோனாவுக்கு எதிரான போராட்டமா? என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

Tags :
|