Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கலிபோர்னிய சிறைச்சாலைகளில் கொரோனா காரணமாக 8 ஆயிரம் கைதிகளை விடுதலை செய்ய முடிவு

கலிபோர்னிய சிறைச்சாலைகளில் கொரோனா காரணமாக 8 ஆயிரம் கைதிகளை விடுதலை செய்ய முடிவு

By: Karunakaran Sat, 11 July 2020 8:42:27 PM

கலிபோர்னிய சிறைச்சாலைகளில் கொரோனா காரணமாக 8 ஆயிரம் கைதிகளை விடுதலை செய்ய முடிவு

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகையே உலுக்கி வருகிறது. உலகளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடாக அமெரிக்கா உள்ளது. அமெரிக்காவில் இதுவரை 32 லட்சம் பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அங்கு இதுவரை 1 லட்சத்து 36 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவின் கலிபோர்னியா உள்பட பல மாகாணங்களில் தற்போது மீண்டும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ளது. குறிப்பாக சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளுக்கு கொரோனா பாதிப்பு அதிகமாக ஏற்பட்டு வருகிறது.

california prisons,america,corona virus,jail ,கலிபோர்னியா சிறைச்சாலைகள், அமெரிக்கா, கொரோனா வைரஸ், சிறை

கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள 35 சிறைச்சாலைகளில் மொத்தம் 2 ஆயிரத்து 400 கைதிகளுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா பரவலை தடுக்க 10 ஆயிரம் கைதிகளை தண்டனை காலம் முடிவடையும் முன்னே விடுதலை செய்ய கலிபோர்னியா சிறை நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இந்த நடைமுறையின் கீழ் ஒரு வருடம் அல்லது அதற்கும் குறைவான தண்டனை காலம் உள்ள கைதிகள் விடுதலை செய்யப்படுகின்றனர். வன்முறை மற்றும் பாலியல் ரீதியிலான குற்றச்செயல்களில் ஈடுபட்ட கைதிகளுக்கு இந்த விடுதலை நடைமுறை பொருந்தாது.

Tags :