Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மதுபானம் மீது விதித்திருந்த சிறப்பு கொரோனா கட்டணத்தை டெல்லி அரசு திரும்ப பெற்றது

மதுபானம் மீது விதித்திருந்த சிறப்பு கொரோனா கட்டணத்தை டெல்லி அரசு திரும்ப பெற்றது

By: Karunakaran Sun, 07 June 2020 3:28:33 PM

மதுபானம் மீது விதித்திருந்த சிறப்பு கொரோனா கட்டணத்தை டெல்லி அரசு திரும்ப பெற்றது

கொரோனா வைரஸ் காரணமாக இந்திய பொருளாதாரம் கடுமையாக பாதிப்படைந்துள்ளது. இந்த கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றன. இருப்பினும் மத்திய அரசு போதுமான அளவு நிதியினை மாநில அரசுக்கு கொடுக்கவில்லை.

இதனால் மதுபானக்கடைகள் திறக்கப்பட்டபின், மாநில அரசுகள் மதுபானத்திற்கான வரியை உயர்த்தின. அதன்படி, டெல்லி அரசு மதுபானக்கடைகளுக்கு ‘சிறப்பு கொரோனா கட்டணம்’ என்ற 70 சதவீத வரியை விதித்தது.

corona virus,indian economy,liquor stores,government of delhi ,கொரோனா வைரஸ்,இந்திய பொருளாதாரம்,மதுபான கடைகள்,டெல்லி அரசு

தற்போது, கடும் நிதி பற்றாக்குறை காரணமாக மதுபான கடைகள் மீது விதிக்கப்பட்டிருந்த சிறப்பு கொரோனா கட்டணத்தை டெல்லி அரசு தற்போது திரும்ப பெற்றுள்ளது.

மேலும், வாட்வரியை 20 சதவிகிதத்தில் 25 சதவிகிதமாக டெல்லி அரசு உயர்த்தியுள்ளது.

Tags :