Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியாவில் ரேஷன் கார்டு விதிகளில் மாற்றம் செய்ய இருப்பதாக ..... உணவு மற்றும் பொது விநியோகத் துறை தகவல்

இந்தியாவில் ரேஷன் கார்டு விதிகளில் மாற்றம் செய்ய இருப்பதாக ..... உணவு மற்றும் பொது விநியோகத் துறை தகவல்

By: vaithegi Tue, 14 June 2022 3:24:48 PM

இந்தியாவில்  ரேஷன் கார்டு விதிகளில் மாற்றம் செய்ய இருப்பதாக ..... உணவு மற்றும் பொது விநியோகத் துறை தகவல்

இந்தியா: ரேஷன் கார்டு மூலம் ஏழை எளிய மக்கள் மாதந்தோறும் அத்தியாவசிய பொருட்களான அரிசி, பருப்பு,கோதுமை போன்ற பல பொருள்களை பெற்று வருகின்றனர். கடந்த கொரோனா பேரிடர் காலத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகள் சார்பாக ரேஷன் கடைகள் மூலம் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.

அதனை தொடர்ந்து வேலைக்காக இடம்பெயரும் தொழிலாளர்களை மனதில் கொண்டு "ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டமும் "அனைத்து மாநிலங்களிலும் அமல்படுத்தப்பட்டது. தற்போதைய காலகட்டத்தில் ரேஷன் கார்டு அவசிய ஒன்றாக இருப்பதால் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் தகுதி இல்லாத பல லட்சம் பேர் ரேஷன் திட்டத்தின் கீழ் பயன் பெற்று வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ration card,ration card,food and public distribution department ,ரேஷன் கார்டு, ரேஷன் கார்டு,உணவு மற்றும் பொது விநியோகத் துறை

அதனால் ரேஷன் கார்டு தொடர்பான விதிகளை மாற்றம் செய்ய மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை முடிவு செய்துள்ளது. அதன் படி, தகுந்த தகுதி உடைய ரேஷன் அட்டைதாரர்களுக்கு மட்டும் கிடைக்க கூடிய வகையில் விதிகளில் மாற்றம் செய்யபட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக, மாநில அரசுகளுடன், மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்த போவதாக தெரிவித்துள்ளனர். தற்போது நாடு முழுவதும் 80 கோடி மக்கள் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் மூலம் பயன் பெற்று வருகின்றனர்.

இந்த ரேஷன் கார்டு திட்டம் ஏழை எளிய மக்களுக்கு மட்டுமே, ஆனால் இதில் வசதி படைத்தோரும் பயன் பெறுகின்றனர். 100 சதுர மீட்டர் பரப்பளவில் ஃபிளாட் அல்லது வீடு, நான்கு சக்கர வாகனம் வைத்திருப்பவர்கள் ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு மேல் வருமானம் உள்ளவர்கள் தங்களது ரேஷன் கார்டை தாலுகா அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று மத்திய அரசு ஏற்கனவே தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தகுதியற்ற மற்றும் போலியான ரேஷன் கார்டுகளை ரத்து செய்ய பரிசீலனை நடைபெற்று வருவதாக உணவு மற்றும் பொது விநியோகத் துறை அறிவித்துள்ளது.

Tags :