Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானாதும் அது குறித்த விபரங்கள் உயர்கல்வித் துறைக்கு உடனே அனுப்பப்படும் ....என கல்வித்துறை அறிவிப்பு

தமிழகத்தில் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானாதும் அது குறித்த விபரங்கள் உயர்கல்வித் துறைக்கு உடனே அனுப்பப்படும் ....என கல்வித்துறை அறிவிப்பு

By: vaithegi Wed, 15 June 2022 11:25:52 AM

தமிழகத்தில் 12ம் வகுப்பு  தேர்வு முடிவுகள் வெளியானாதும் அது குறித்த விபரங்கள் உயர்கல்வித் துறைக்கு உடனே அனுப்பப்படும் ....என கல்வித்துறை அறிவிப்பு

தமிழகம்: தமிழகத்தில் கடந்த 2 வருட காலமாகவே கொரோனா தொற்றால் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, மாணவர்கள் ஆன்லைன் முறையில் மற்றும் கல்வி தொலைக்காட்சி வாயிலாக பாடங்களை கற்று வந்தனர்.

இந்நிலையில் கொரோனா குறைந்த நிலையில் மட்டுமே மாணவர்களுக்கு பிப்ரவரி 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் சுழற்சி முறையில் பள்ளிக்கு வரவழைக்கப்பட்டன.பள்ளிகள் செயல்பட்டு வந்தன.

schools,corona,department of education ,பள்ளிகள் ,கொரோனா,கல்வித்துறை

பின்னர், மாணவர்களுக்கு அதிகமான விடுமுறை விடப்பட்டதால் சனிக்கிழமைகளில் கூட பள்ளி வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டன. மாணவர்களுக்கு மிக தாமதாக பள்ளிகள் திறக்கப்பட்டதால் முழு பாடப்பகுதியை முடிக்க முடியாமல் ஆசிரியர்கள் மிகவும் திணறி வந்தனர்.

இதனால் மாணவர்களின் நலன் கருதி குறிப்பிட்ட சதவீதத்தில் பாடம் குறைக்கப்பட்டது. அதன்படி, குறைக்கப்பட்ட பாடப்பகுதியில் இருந்து மட்டுமே கேள்விகள் கேட்கப்படும் என கல்வித்துறை அமைச்சர் அறிவித்திருந்தார்.

அதன்படி, மாணவர்களுக்கு மே 5ம் தேதி பொதுத் தேர்வுகள் நடத்தப்பட்டது. இந்த தேர்வில் 8.5 லட்சம் மாணவ, மாணவிகள் பொதுத் தேர்வு எழுதினார்கள். அதன்பின்னர், வரும் 23ம் தேதி 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியிட உள்ளனர். மாணவர்களுக்கு முடிவுகள் வெளியானதும், மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அது குறித்த உண்மைத்தன்மையை விரைவாக அந்தந்த துறைகளுக்கு அனுப்பப்படும் என்றும், அதற்கான முன் ஏற்பாடுகள் நடந்து வருவதாக தேர்வு துறை தெரிவித்துள்ளது.

Tags :
|