Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் வலுவிழக்க கூடும்

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் வலுவிழக்க கூடும்

By: vaithegi Sat, 04 Feb 2023 3:39:59 PM

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் வலுவிழக்க கூடும்

சென்னை: வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த ஒரு வார காலமாகவே தமிழகம் மற்றும் புதுவையில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் கனமழை பெய்து கொண்டு வருகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது மன்னர் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவுகிறது.

இதன் காரணமாக இன்று தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மற்றும் புதுவையின் ஓரிடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

low pressure zone,bay of bengal , காற்றழுத்த தாழ்வு மண்டலம்,வங்கக் கடல்

மேலும் காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் வலுவிழக்க கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பிப். 5,6,7,8 ஆகிய தேதிகளில் தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலையே நிலவக்கூடும்.

இதையடுத்து சென்னை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அத்துடன் வெப்பநிலை அதிகபட்சமாக 31 – 32 செல்சியஸ் என்ற அளவில் இருக்கக்கூடும். மேலும் இன்று குமரிக்கடல் மற்றும் மாலத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். அதனால் இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

Tags :