Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • காற்றழுத்த தாழ்வு மண்டலமானது தற்போது புயலாக வலுப்பெற்று உள்ளது

காற்றழுத்த தாழ்வு மண்டலமானது தற்போது புயலாக வலுப்பெற்று உள்ளது

By: vaithegi Tue, 24 Oct 2023 09:53:28 AM

காற்றழுத்த தாழ்வு மண்டலமானது தற்போது புயலாக வலுப்பெற்று உள்ளது


சென்னை: மேற்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலமானது தற்போது புயலாக வலுப்பெற்றுவுள்ளது. ஹாமூன் என பெயரிடப்பட்ட இந்த புயலானது தற்போது வடகிழக்கு நோக்கி நகர்ந்து செல்கிறது.எனவே இதன் காரணமாக ஓடிசா வங்கதேசம் உள்ளிட்ட வடகிழக்கு மாவட்ட மாநிலங்களில் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து கொண்டு வருகிறது.

இப்புயல் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையில் 9 துறைமுகங்களில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது. சென்னை, கடலூர், தூத்துக்குடி, எண்ணூர், காட்டுப்பள்ளி, நாகை, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன் ஆகிய துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

depression,storm,tamil nadu,puducherry ,காற்றழுத்த தாழ்வு மண்டலம்,புயல் ,தமிழகம் ,புதுச்சேரி


இதையடுத்து ஏற்கனவே புயல் உருவாவதற்கான அறிகுறி இருப்பதாக கூறி 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டிருந்த நிலையில் தற்போது புயல் உருவானதை குறிப்பிடும் வகையில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது. மொத்தம் 11 புயல் எச்சரிக்கை கூண்டுகள் வரை மழை, புயலின் அளவை பொறுத்து ஏற்றப்படும்.

மேலும் இந்த ஹாமூன் புயலானது மேற்கு வங்கம், ஒடிசா கடற்கரை பகுதியில் நகர்ந்து வருவதால் அம்மாநிலத்தில் கனமழை பெய்யும் வாய்ப்பு மிக அதிகமாக இருக்கிறது. இதனால் கனமழையை எதிர்கொள்ள அம்மாநில அரசுகள் தயாராகி கொண்டு வருகின்றன.

Tags :
|