Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வங்க கடலில் நிலவிவரும் காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது

வங்க கடலில் நிலவிவரும் காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது

By: vaithegi Thu, 14 Sept 2023 09:19:22 AM

வங்க கடலில் நிலவிவரும் காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது

சென்னை:நேற்று காலை வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.

இது அடுத்த 3 தினங்களில் ஒரிசா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளை நோக்கி நகரக்கூடும். மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது

low pressure area,meteorological center ,காற்றழுத்த தாழ்வு பகுதி,வானிலை மையம்

இதனை அடுத்து நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இந்த நிலையில் வங்க கடலில் நிலவிவரும் காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. இது அடுத்த இரண்டு நாட்களில் ஒடிசா, சட்டீஸ்கர் நோக்கி நகரக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்து உள்ளது

Tags :