Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்றது

காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்றது

By: vaithegi Wed, 29 Nov 2023 10:01:54 AM

காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்றது


சென்னை: நேற்று முன்தினம் தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு திசையில் நகர்ந்து நேற்று காலை தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவுகிறது.

இதையடுத்து இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 30-ஆம் தேதி வாக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற கூடும்.மேலும் இது அதற்கடுத்த 48 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெற கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்தது.

deep depression,meteorological center , ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, வானிலை ஆய்வு மையம்


இந்நிலையில் தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அதை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்றது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக வலுவடையும். வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் தீவிரமடைந்து ஒரு சூறாவளியாக மாற வாய்ப்பு உள்ளது.

வருகிற டிசம்பர் 2-ஆம் தேதி வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் கடலுக்குச் சென்ற மீனவர்கள் வருகிற 1 ஆம் தேதிக்குள் கரைக்குத் திரும்ப அறிவுறுத்தி உள்ளது.

Tags :