Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது

காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது

By: vaithegi Sat, 02 Dec 2023 10:04:06 AM

காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது

சென்னை: கடந்த 30-ஆம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், புதுச்சேரிக்கு கிழக்கு-தென்கிழக்கே சுமார் 760 கிலோமீட்டர் தொலைவிலும்,

சென்னைக்கு கிழக்கு-தென்கிழக்கே சுமார் 780 கிலோமீட்டர் தொலைவிலும், பாபட்லாவிற்கு (ஆந்திரா) தென்கிழக்கே சுமார் 960 கிலோமீட்டர் தொலைவிலும், மசூலிபட்டினத்திற்கு (ஆந்திரா) தென்கிழக்கே சுமார் 940 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டது.

depression,bay of bengal ,காற்றழுத்த தாழ்வு மண்டலம்,வங்கக்கடல்


இந்த நிலையில் தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டு உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.

இதனை அடுத்து நாளை தென்மேற்கு வங்கக் கடலில் புயலாக மாற வாய்ப்புள்ளது. வருகிற டிச. 5ம் தேதி ஆந்திரப் பிரதேச மாநிலம் நெல்லூர் - மசூலிப்பட்டினம் இடையே புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து உள்ளது.

Tags :