Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை காலை வலுவிழக்கும் ... இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை காலை வலுவிழக்கும் ... இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

By: vaithegi Mon, 21 Nov 2022 10:03:26 AM

காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை காலை வலுவிழக்கும் ...   இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

இந்தியா : வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை காலை வலுவிழக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழகம் - புதுச்சேரி கடற்கரை நோக்கி நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கும்

இதனை அடுத்து சென்னைக்கு கிழக்கு-தென்கிழக்கில் 450 கி.மீ தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

india meteorological department,depression ,இந்திய வானிலை ஆய்வு மையம்,காற்றழுத்த தாழ்வு மண்டலம்

இதையடுத்து வானிலை எச்சரிக்கையை தொடர்ந்து சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய துறைமுகங்களில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

மேலும் பாம்பன் மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களில் 1 எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளை மறுநாள் வரை மழை தொடரும் என்று கூறப்பட்டுள்ளது

Tags :