Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • துரைக்கண்ணுவின் மறைவு பேரிழப்பு; முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேதனை

துரைக்கண்ணுவின் மறைவு பேரிழப்பு; முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேதனை

By: Nagaraj Sun, 01 Nov 2020 11:15:35 AM

துரைக்கண்ணுவின் மறைவு பேரிழப்பு; முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேதனை

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அமைச்சர் துரைக்கண்ணு இறந்தார். இதையடுத்து அமைச்சர் துரைக்கண்ணுவின் மறைவு பேரிழப்பு என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மூச்சுத் திணறல் காரணமாக வேளாண்மைத் துறை அமைச்சா் துரைக்கண்ணு ( 72) கடந்த அக்.13-ஆம் தேதி சென்னை ஆழ்வாா்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். கொரோனா பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதியானது.

இதையடுத்து அருவக்கு மருத்துவா்கள் தீவிர சிகிச்சை அளித்தனா். 90 சதவீத நுரையீரல் தொற்று ஏற்பட்டதால் எக்மோ கருவி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், சிகிச்சை பலன் அளிக்காமல் சனிக்கிழமை இரவு காலமானாா்.

minister durakkannu,deceased,corona,tribute,chief ,அமைச்சர் துரைக்கண்ணு, காலமானார், கொரோனா, அஞ்சலி, முதல்வர்

இந்த நிலையில் காவிரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள அமைச்சர் துரைக்கண்ணு உருவப்படத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். அமைச்சர்கள் விஜயபாஸ்கர், காமராஜ், உதயகுமார், செல்லூர் ராஜூ, தமாக தலைவர் ஜி.கே.வாசன் மற்றும் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

அப்போது பேசிய முதல்வர், அமைச்சர் துரைக்கண்ணுவின் மறைவு வேதனையையும் அதிர்ச்சியையும் தருகிறது. எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்தே அதிமுகவில் பயணித்து கட்சிக்காக பாடுபட்டவர்.

துரைக்கண்ணுவின் இழப்பு அதிமுகவுக்கும், எனக்கும் தனிப்பட்ட முறையில் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடுத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

இதனிடையே நல்லடக்கம் செய்வதற்காக அமைச்சர் துரைக்கண்ணு உடல் சென்னையில் இருந்து தஞ்சை ராஜகிரிக்கு புறப்பட்டது. வன்னியடி கிராமத்தில் உள்ள துரைக்கணணுவின் வயலில் மக்களின் அஞ்சலிக்காக உடல் வைக்கப்படுகிறது. அஞ்சலிக்கு பிறகு அரசலாறு அருகே அமைச்சர் துரைக்கண்ணு உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

Tags :
|