Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • துபாய்-புஜேரா இடையே சார்ஜா வழியாக 145 கி.மீ. தொலைவுக்கு ரெயில்வே பாதை அமைக்கும் பணி தொடக்கம்

துபாய்-புஜேரா இடையே சார்ஜா வழியாக 145 கி.மீ. தொலைவுக்கு ரெயில்வே பாதை அமைக்கும் பணி தொடக்கம்

By: Karunakaran Thu, 10 Sept 2020 4:48:02 PM

துபாய்-புஜேரா இடையே சார்ஜா வழியாக 145 கி.மீ. தொலைவுக்கு ரெயில்வே பாதை அமைக்கும் பணி தொடக்கம்

அமீரகத்தில் எதிகாத் தேசிய ரெயில்வே திட்டம் கடந்த 2009-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் படி, சவுதி அரேபியா மற்றும் ஓமன் நாடு வரை மொத்தம் 1,200 கி.மீ. தொலைவு கொண்ட போக்குவரத்து பாதையாக உருவாக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. அமீரகத்தில் உள்ள ரெயில்வே தடம் அமீரகத்தில் அபுதாபி, துபாய், அல் அய்ன் பகுதியில் மதினத் ஜாயித் மற்றும் தொழில்துறை முக்கியத்துவம் வாய்ந்த இடங்களான முசாபா, கலீபா துறைமுகம், ஜெபல் அலி இலவச பொருளாதார மண்டலம், புஜேரா துறைமுகம், சகர் துறைமுகம் ஆகிய முக்கிய இடங்களை இணைப்பதாக இருக்கும்.

இந்த ரெயில்வே போக்குவரத்தில் சரக்கு ரெயில்கள் மட்டும் தற்போது இயக்கப்படுகிறது. இந்த ரெயில்வே திட்டத்தின் விரிவாக்க பணிகளில் அமீரகத்தின் அபுதாபி, துபாய், சார்ஜா, அஜ்மான், உம் அல் குவைன், ராசல் கைமா மற்றும் புஜேரா ஆகிய 7 பகுதிகளில் உள்ள முக்கிய துறைமுகங்கள் மற்றும் நகரங்களை இணைக்க 605 கி.மீ. தொலைவுக்கு புதிய ரெயில்வே வழித்தடங்கள் அமைக்கப்படவுள்ளது.

dubai,fujairah,sharjah,railway line ,துபாய், புஜைரா, ஷார்ஜா, ரயில் பாதை

துபாயில் இருந்து சார்ஜா வழியாக புஜேரா வரை 145 கி.மீ. தொலைவுக்கு ரெயில்வே பாதை உருவாக்க பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த பணிகளில் துபாயில் இருந்து செல்லும் பாதையில் ஹஜார் மலைப்பகுதி குடையப்பட்டு அதில் 15 சுரங்க பாதைகள் அமைக்கப்படவுள்ளது. மேலும் இந்த துபாய்- புஜேரா ரெயில்வே தடத்தில் 35 பாலங்கள் அமைய உள்ளன. இதற்கான பணிகள் அந்த மலைப்பகுதியில் தொடங்கியுள்ளது.

பிரமாண்டமான எந்திரங்களை கொண்டு மலையை குடைந்து நடைபெறும் இந்த பணியில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். துபாயில் இருந்து தொடங்கும் இந்த ரெயில் வழித்தடம் சார்ஜா வழியாக புஜேரா துறைமுகத்தை சென்றடைகிறது. கிழக்கு கடற்கரை பகுதி வழியாக ரெயில்கள் செல்வது போன்று கிராபிக் காட்சிகள் சித்தரிக்கப்பட்ட வீடியோவை எதிகாத் ரெயில்வே வெளியிட்டுள்ளது.

Tags :
|