Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் இன்று 38-வது நாளாக தடை

ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் இன்று 38-வது நாளாக தடை

By: vaithegi Tue, 16 Aug 2022 11:11:30 AM

ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் இன்று 38-வது நாளாக தடை

பென்னாகரம்: கர்நாடகா, கேரளா மாநில நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து கொண்டு வருகிறது. எனவே இதனால் கர்நாடக கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து உயர்ந்துள்ளது.

இதை அடுத்து நேற்று ஒகேனக்கல்லுக்கு 80 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இதனை தொடர்ந்து இன்று காலை 6 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 50 ஆயிரம் கனஅடியாக குறைந்து வந்தது.

okanagan falls,no bathing ,ஒகேனக்கல் அருவி, குளிக்கதடை

மேலும் ஐவர்பாணி, சினிபால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதனால் ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் இன்று 38-வது நாளாக தடை விதித்துள்ளது.

எனவே நீர்வரத்து அதிகரிப்பால் வருவாய்த்துறையினர், போலீசார் காவிரி கரையோர பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நீர்வரத்தை பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் அளவீடு செய்து கண்காணித்து கொண்டு வருகின்றனர்.

Tags :