Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பெரம்பலூரில் நடந்த மாரத்தான் போட்டியை தொடக்கி வைத்த மாவட்ட ஆட்சியர்

பெரம்பலூரில் நடந்த மாரத்தான் போட்டியை தொடக்கி வைத்த மாவட்ட ஆட்சியர்

By: Nagaraj Sat, 07 Oct 2023 10:35:48 AM

பெரம்பலூரில் நடந்த மாரத்தான் போட்டியை தொடக்கி வைத்த மாவட்ட ஆட்சியர்

பெரம்பலூர்: பேரறிஞர் அண்ணா மாரத்தான் ஓட்டப்போட்டியினை மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில்நடத்தப்பட்ட அறிஞர் அண்ணா மாரத்தான் ஓட்டப்போட்டிகளை மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் இன்றுகொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் முன்னிலை வகித்தார்.

இந்த மாரத்தான் போட்டிகள் 17 வயது முதல் 25 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கு 8 கி.மீ தூரமும், பெண்களுக்கு 5 கி.மீ தூரமும் நடத்தப்பட்டது. மேலும் 25 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கு 10 கி.மீ தூரமும், பெண்களுக்கு 5 கி.மீ தூரமும் ஓட்டப்போட்டிகள் நடத்தப்பட்டது.

athletic trainer,marathon,district collector,prizes ,தடகளப்பயிற்றுனர், மாரத்தான், மாவட்ட ஆட்சியர், பரிசுகள்

போட்டிகள் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இருந்து துவங்கி 5 கி.மீ. தூரம் கலந்துகொள்ளும் பெண்களுக்கு பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி வரையிலும், 8 கி.மீ தூரம் உள்ள ஆண்களுக்கு தனலெட்சுமி சீனிவாசன் கல்லூரி வரையிலும், 10 கி.மீ தூரம் உள்ள ஆண்களுக்கு பைபாஸ் (சென்னை) வரையிலும் என நடத்தப்பட்டது.

இப்போட்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள், இளம்பெண்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர். போட்டிகளில் வெற்றிபெறும் நபர்களுக்கு முதல் பரிசாக ரூ.5,000/- வீதமும் இரண்டாம் பரிசாக ரூ.3,000/- வீதமும், மூன்றாம் பரிசாக ரூ.2,000/- வீதமும் நான்காம் இடம் முதல் பத்தாம் இடம் பெற்று வெற்றிபெறுப்வர்களுக்கு தலா ரூ.1000/-வீதமும் ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனியே காசோலையாக வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

நிகழ்ச்சியில் நகர்மன்ற துணைத் தலைவர் ஹரிபாஸ்கர், தடகளப்பயிற்றுனர் திருமதி பரணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags :