Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மாற்றுத்திறனாளிகளுக்கு எண்ணற்ற திட்டங்களை செய்தது திமுக அரசு

மாற்றுத்திறனாளிகளுக்கு எண்ணற்ற திட்டங்களை செய்தது திமுக அரசு

By: Nagaraj Sun, 20 Nov 2022 2:16:15 PM

மாற்றுத்திறனாளிகளுக்கு எண்ணற்ற திட்டங்களை செய்தது திமுக அரசு

சென்னை: மாற்றுத்திறனாளிகளுக்கு எண்ணற்ற திட்டங்களை திமுக அரசு செய்து வருகிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதமாக தெரிவித்துள்ளார்.

சென்னை கோபாலபுரத்தில் மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு சார்பில் 54 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. இதில் முன்னிலை வகித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் திருமணத்தை நடத்திவைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:

persons with disabilities,principal,to be fulfilled,marriage,chennai ,மாற்றுத்திறனாளிகள், முதல்வர், நிறைவேற்றப்படும், திருமணம், சென்னை

இலவச பஸ் பாஸ், உலக வங்கி நிதியுதவியுடன் கருவிகள், உதவித்தொகை, ஆவின் பாலகங்கள் அமைக்க முன்னுரிமை என பல திட்டங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு கொண்டு வரப்பட்டன.

இவையெல்லாம் சலுகைகள் அல்ல, உங்களுக்கு வழங்கப்பட்ட உரிமைகள். மாற்று திறனாளிகளுக்கு எண்ணற்ற திட்டங்களை திமுக அரசு செய்து வருகிறது. மாற்றுத்திறனாளிகளின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags :