Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தீப்பிடித்த வீட்டிலிருந்து உரிமையாளரை காப்பாற்றிய நாய்கள்

தீப்பிடித்த வீட்டிலிருந்து உரிமையாளரை காப்பாற்றிய நாய்கள்

By: Nagaraj Tue, 23 May 2023 11:18:28 AM

தீப்பிடித்த வீட்டிலிருந்து உரிமையாளரை காப்பாற்றிய நாய்கள்

இங்கிலாந்து: தீப்பிடித்த வீட்டிலிருந்து காப்பாற்றின... இங்கிலாந்தில், நள்ளிரவில் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்த வீட்டிலிருந்து வீட்டின் உரிமையாளரை வளர்ப்பு நாய்கள் காப்பாற்றிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

எஸ்செக்ஸ் கவுண்டியில் உள்ள வீடு ஒன்றில் கடந்த சனிக்கிழமை நள்ளிரவில் தீவிபத்து ஏற்பட்டது. தீ மளமளவென கொழுந்துவிட்டு எரிந்ததால், வீட்டிலிருந்த வீட்டின் உரிமையாளர்கள் தீயில் சிக்கும் அபாயம் நேர்ந்தது.

ashes,house,fire,dogs,saved ,சாம்பலானது, வீடு, தீவிபத்து, நாய்கள், காப்பாற்றின

அப்போது, வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த நாய்கள் அங்குமிங்கும் ஓடி சத்தமாக குரைத்தன. நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்த வீட்டு உரிமையாளர், வீடு தீப்பிடித்து எரிவதை அறிந்து உடனடியாக தன் மனைவி உடன் வெளியேறினார்.

சிறிதுநேரத்தில் வீட்டின் மேற்பகுதி எரிந்து சாம்பலானது. தக்க சமயத்தில் நாய்கள் குரைத்ததால் வீட்டில் இருந்தவர்கள் உயிர்தப்பினர்.

Tags :
|
|
|
|