Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்திய நாட்டின் தியாகிகளைப் போற்றிப் பாராட்டுவதில் திராவிட முன்னேற்றக் கழக அரசு யாருக்கும் சளைத்தது அல்ல .. மு.க. ஸ்டாலின்

இந்திய நாட்டின் தியாகிகளைப் போற்றிப் பாராட்டுவதில் திராவிட முன்னேற்றக் கழக அரசு யாருக்கும் சளைத்தது அல்ல .. மு.க. ஸ்டாலின்

By: vaithegi Mon, 15 Aug 2022 2:47:27 PM

இந்திய நாட்டின் தியாகிகளைப் போற்றிப் பாராட்டுவதில் திராவிட முன்னேற்றக் கழக அரசு யாருக்கும் சளைத்தது அல்ல ..  மு.க. ஸ்டாலின்

சென்னை: சென்னை: சுதந்திர தின விழாவில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது: இந்திய நாட்டின் தியாகிகளைப் போற்றிப் பாராட்டுவதில் திராவிட முன்னேற்றக் கழக அரசு யாருக்கும் சளைத்தது அல்ல.

* பாரதியின் இல்லம் அரசு இல்லமானது! * பெருந்தலைவர் காமராசர் மணிமண்டபம்! * தில்லையாடி வள்ளியம்மை மணிமண்டபம்! * வீரவாஞ்சியின் உறவினருக்கு நிதி! * வ.உ.சி. இழுத்த செக்கு நினைவுச் சின்னமானது

மேலும் விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு இலவசப் பேருந்து பயணம்! * விடுதலைப் பொன்விழா நினைவுச் சின்னம்! * தியாகி விஸ்வநாத தாஸ் வாழ்ந்த இல்லம் புதுப்பிப்பு! * மாவீரன் சுந்தரலிங்கம் வாரிசுகளுக்கு வீடு! -இப்படி நாட்டுக்காக உழைத்த தியாகிகளைப் போற்றுகின்ற இயக்கம்தான், திராவிட முன்னேற்றக் கழகம்!

m.k. stalin,dravida munnetra kazhagam ,மு.க. ஸ்டாலின் ,திராவிட முன்னேற்றக் கழகம்

இதை அடுத்து கடந்த ஓராண்டுகாலத்தில் விடுதலைப் போராட்டத் தியாகிகளைப் போற்றும் ஏராளமான பணிகளைச் செய்துள்ளோம். இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் 260 ஆண்டு கால தொடர் பங்களிப்பு பற்றி, எதிர்கால இளம் சமுதாயம் அறிந்து கொள்ளும் வகையில், நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய 'விடுதலை நாள் அருங்காட்சியகம்' ஒன்று சென்னையில் அமைக்கப்படும் என்பதைப் பெருமிதம் பொங்க, இந்த வரலாற்றுச் சிறப்புமிகு நாளில் தெரிவித்துக்கொள்கிறேன்.

அனைத்து மனிதநேயக் கொள்கைகளும் கொண்ட "திராவிட மாடல்" ஆட்சியைத்தான் நாம் நடத்தி வருகிறோம். சமூகநீதி-சமத்துவம்-சுயமரியாதை-மொழிப்பற்று-இன உரிமை-மாநில சுயாட்சி ஆகிய கருத்தியல்களின் அடித்தளத்தில் நிற்கும் இயக்கம்தான் திராவிட முன்னேற்றக் கழகம். அந்த அடிப்படையில்தான் ஆட்சியும் அமைந்துள்ளது என கூறினார்.

Tags :