Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வெள்ளை மாளிகை பாதுகாப்பு தடுப்புகள் மீது மோதிய டிரக்கை ஓட்டி வந்தவர் அடையாளம் தெரிந்தது

வெள்ளை மாளிகை பாதுகாப்பு தடுப்புகள் மீது மோதிய டிரக்கை ஓட்டி வந்தவர் அடையாளம் தெரிந்தது

By: Nagaraj Wed, 24 May 2023 8:14:22 PM

வெள்ளை மாளிகை பாதுகாப்பு தடுப்புகள் மீது மோதிய டிரக்கை ஓட்டி வந்தவர் அடையாளம் தெரிந்தது

அமெரிக்கா: அடையாளம் தெரிந்தது... அமெரிக்காவில் வெள்ளை மாளிகையின் பாதுகாப்பு தடுப்புகள் மீது மோதிய டிரக்கை ஓட்டி வந்த நபர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 19 வயது சாய் வர்ஷித் கந்துலா என அடையாளம் காணப்பட்டுள்ளது.

மிசோரி மாகாணம் செஸ்டர்ஃபீல்டு பகுதியில் வசித்துவந்த வர்ஷித் கந்துலா மீது அதிபர், துணை அதிபர் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுத்தல், கடத்தல், தீங்கு விளைவித்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

investigation,officers,investigation,indian origin,kidnapping,intimidation ,புலனாய்வு, அதிகாரிகள், விசாரணை, இந்திய வம்சாவளி, கடத்தல், மிரட்டல்

வர்ஷித் கந்துலாவிடம் புலனாய்வு அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags :