Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இமார்டி தேவிக்கு இன்று ஒரு நாள் பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை

இமார்டி தேவிக்கு இன்று ஒரு நாள் பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை

By: Nagaraj Sun, 01 Nov 2020 4:47:51 PM

இமார்டி தேவிக்கு இன்று ஒரு நாள் பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை

ஒரு நாள் பிரச்சாரம் செய்ய தடை... மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க. பெண் வேட்பாளர் இமார்டி தேவிக்கு இன்று ஒரு நாள் (நவம்பர் 1ம் தேதி) பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

மத்திய பிரதேசத்தில் காலியாக உள்ள 28 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு வரும் 3ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளும் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் பிசியாக உள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கமல் நாத், பா.ஜ.க. பெண் வேட்பாளர் இமார்டி தேவியை அயிட்டம் என்று கூறினார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

இதனையடுத்து கமல் நாத்தை இமார்டி தேவி பைத்தியம் என்றார். இதுவும் சர்ச்சையை கிளப்பியது. இந்த தலைவர்களின் பேச்சுக்கள் தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்கு சென்றது. இதன் விளைவாக, தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக கூறி கமல் நாத்தின் நட்சத்திர பேச்சாளர் அந்தஸ்தை திரும்ப தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

imrti devi,one day ban,campaign,electronic,election commission ,
இமார்டிதேவி, ஒரு நாள் தடை, பிரச்சாரம், எலக்ட்ரானிக், தேர்தல் ஆணையம்

இந்நிலையில் நேற்று இமார்டி தேவிக்கு நவம்பர் 1ம் தேதி (இன்று) தேர்தல் பிரச்சாரம் செய்ய தடை விதித்தது. முன்னதாக கடந்த செவ்வாய்க்கிழமையன்று சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தது குறித்து 48 மணி நேரத்தில் பதில் அளிக்கும்படி இமார்டி தேவிக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.

தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய அரசியலமைப்பின் 324வது பிரிவின்கீழ் ஆணையம் மற்றும் இது சார்பாக செயல்படும் மற்ற அனைத்து அதிகாரங்களும், இடைத்தேர்தல் தொடர்பாக மத்திய பிரதேசத்தில் எங்கும் பொதுக் கூட்டங்கள், பொது ஊர்வலங்கள், பொது பேரணிகள், நிகழ்ச்சிகள் மற்றும் நேர்காணல்கள், ஊடகங்களில் (எலக்ட்ரானிக், பத்திரிகை மற்றும் சமூக ஊடகங்கள்) நவம்பர் 1ம் தேதியன்று பங்கேற்க இமார்டி தேவியை தடை செய்கிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :