Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 5 மாநில சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவிக்கிறது

5 மாநில சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவிக்கிறது

By: vaithegi Mon, 09 Oct 2023 09:58:57 AM

5 மாநில சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவிக்கிறது

இந்தியா: 5 மாநில தேர்தல் அட்டவணையை இன்று அறிவிக்கிறது ... ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்டத்தின் ஆலோசனைகளின் படி இன்று 5 மாநிலங்களுக்கு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படுகிறது. சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரம் டிசம்பர் 17ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. மேலும் அத்துடன் மற்ற மாநிலங்களிலும் பதவிக்காலம் நிறைவடைய உள்ள நிலையில் இதனை முன்னிட்டு 5 மாநில சட்டசபைகளுக்கும் ஒரே தேர்தல் நேரத்தில் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு எடுத்து உள்ளது.

இந்நிலையில் சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், தெலுங்கானா, ராஜஸ்தான், மிசோரம் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவிக்கிறது. அந்த வகையில் பகல் 12 மணிக்கு தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளது.

election commission of india,state legislature,election ,இந்திய தேர்தல் ஆணையம்,மாநில சட்டப்பேரவை,தேர்தல்

இதையடுத்து தேர்தல் நடைபெற உள்ள ராஜஸ்தான், சத்தீஸ்கர் ,மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. மத்திய பிரதேசத்தில் பாஜகவும், தெலுங்கானாவில் பிஆர்எஸ் கட்சியும் ஆட்சியையும் நடத்துகின்றன. எதிர்க்கட்சிகள் இந்தியா கூட்டணி என்ற பெயரில் ஒன்றுபட்டுள்ள நிலையில் தேர்தலால் எதிர்பார்ப்பு என்பது மேலும் அதிகரித்து உள்ளது.

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்றதால் 5 மாநிலங்களிலும் வெற்றி பெறும் யுக்தியுடன் காங்கிரஸ் களமிறங்கி செயல்பட்டு வரும் நிலையில் 2 அல்லது 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் எனவும் கூறப்படுகிறது.

Tags :