முன்னாள் முதல்வரின் விமர்சனம் குறித்து விளக்கம் கேட்டது தேர்தல் ஆணையம்
By: Nagaraj Tue, 20 Oct 2020 1:47:17 PM
தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டது... மத்திய பிரதேசத்தில் பாஜக பெண் வேட்பாளரை முன்னாள் முதலமைச்சர் கமல்நாத், தரக்குறைவாக விமர்சித்தது தொடர்பாக, தலைமை தேர்தல் ஆணையம் மாநில தேர்தல் அதிகாரியிடம் விளக்கம் கேட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்த இமார்தி தேவி (Imarti Devi) என்பவருக்கு, அடுத்த மாதம் நடைபெறவுள்ள இடைத் தேர்தலில் தாப்ரா தொகுதியில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் தாப்ராவில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து நடைபெற்ற பிரசாரத்தில் கமல்நாத் பேசியபோது, இமார்தி தேவியை தரக்குறைவான வார்த்தையைப் பயன்படுத்தி விமர்சித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Tags :
poor |