சேற்றில் சிக்கிய தன்னை காப்பாற்றிய பெண்ணை ஆசிர்வதித்த யானை
By: Nagaraj Sun, 30 Oct 2022 1:08:10 PM
நியூயார்க்: சேற்றில் சிக்கிய யானையை மீட்ட பெண்ணை தன் தும்பிக்கையால் ஆசீர்வாதம் செய்த யானையின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இது எப்போது எங்கு எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை. இருப்பினும் அந்த பெண்ணின் செயலும், யானையின் செயலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.
அந்த வீடியோவில் சேற்றில் ஒரு யானை சிக்கிக்கொண்டு, வெளியே வர முடியாமல் தவிக்கிறது. அப்போது, அந்த வழியாக நாய்க்குட்டியுடன் வந்த பெண் ஒருவர் சேற்றில் யானை சிக்கிக்கொண்டதை பார்க்கிறார்.
உடனே அவர் சேற்றில் சிக்கிய யானை மீட்க முயற்சி செய்கிறார். பின்னர்,
மெல்ல, மெல்ல சேற்றிலிருந்து யானை வெளியே வந்தது. வெளியே வந்த யானை அந்தப்
பெண்ணைப் பார்த்து தும்பிக்கையை தூக்கி ஆசீர்வாதம் செய்துவிட்டுச் சென்றது.
தற்போது இது குறித்த வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப்
பார்த்த நெட்டிசன்கள் அப்பெண்ணுக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும்
தெரிவித்து வருகின்றனர்.