Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கால்பந்து மைதானத்திற்கு முடிவுரை... இடித்து தள்ள இந்தோனேசியா திட்டம்

கால்பந்து மைதானத்திற்கு முடிவுரை... இடித்து தள்ள இந்தோனேசியா திட்டம்

By: Nagaraj Wed, 19 Oct 2022 12:10:50 PM

கால்பந்து மைதானத்திற்கு முடிவுரை... இடித்து தள்ள இந்தோனேசியா திட்டம்

இந்தோனேசியா: கடந்த 1ம் தேதி இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவாவில் மலாங் மாகாணத்தில் உள்ள கஞ்சுருஹான் மைதானத்தில் கால்பந்து போட்டி நடந்தது. அப்போட்டியில், உள்ளூர் அணியான அரேமா மற்றும் பெர்செபயா சுரபயா போட்டியில் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் அரேமா அணி 2-3 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது.


சொந்த மண்ணில் தங்கள் அணி தோல்வியடைந்ததை தாங்கிக்கொள்ள முடியாத அரேமா அணியின் தீவிர ரசிகர்கள் கடும் கோபமடைந்தனர். இதனையடுத்து, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஆடுகளத்திற்கு ஓடிச் சென்று களத்தில் இருந்த அரேமா வீரர்கள் தாக்கினர்.

football stadium,security,demolition,indonesia,violence ,
கால்பந்து மைதானம், பாதுகாப்பு, இடிப்பு, இந்தோனேசியா, வன்முறை

உடனடியாக போலீசார் கலவரத்தை கட்டுப்படுத்த கண்ணீர் புகை குண்டுகளை வீசி அடித்தனர். இதனால் பலர் ஓடும்போது, கூட்ட நெரிசலில் சிக்கியும், கால்பந்து மைதானத்தில் கூட்ட நெரிசலில் சிக்கியும் 130க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.


இந்நிலையில் வன்முறை நடைபெற்ற கால்பந்து மைதானத்தை இடிக்க இந்தோனேசிய அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ கூறுகையில், " மலாங்கில் உள்ள கஞ்சுருஹான் மைதானத்தை இடித்து, பிபா தரத்தின்படி நாங்கள் மீண்டும் அதை கட்டுவோம். வீரர்கள் மற்றும் ஆதரவாளர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யக்கூடிய முறையான வசதிகளுடன் மைதானம் மீண்டும் கட்டப்படும்" என்றார்.

Tags :