Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தொடர்ந்து உயர்ந்து வரும் மின் கட்டண அதிகரிப்பு .. பொருளாதாரம் வீழும் அபாயம்

தொடர்ந்து உயர்ந்து வரும் மின் கட்டண அதிகரிப்பு .. பொருளாதாரம் வீழும் அபாயம்

By: vaithegi Sun, 24 Sept 2023 7:15:49 PM

தொடர்ந்து உயர்ந்து வரும் மின் கட்டண அதிகரிப்பு .. பொருளாதாரம் வீழும் அபாயம்

சென்னை: தமிழகத்தில் கடந்த செப்டம்பர் மாதம் பத்தாம் தேதி புதிய மின் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது. அதன் பின்னராக மீண்டும் ஒரு சில மாதங்களில் மின்கட்டணம் அதிகரித்த்தப்பட்டது. கடந்த ஒரு வருடத்தில் 2 முறை மின்கடணம் உயர்த்தப்பட்டு உள்ளதால் பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் நிறுவன உரிமையாளர்கள் கடும் பாதிப்பில் உள்ளதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து இவர் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், மின் கட்டண உயர்வு நேரடியாகவும் மறைமுகமாகவும் உயர்த்தப்பட்டு இருப்பதால் வணிக நிறுவனங்களுக்கான பொருள்களை உற்பத்தி செலவு அதிகரிப்பதுடன், முதலீடு வெளியாகுதல் மற்றும் வேலை இழப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றது.

economy,electricity bill ,பொருளாதாரம் ,மின் கட்டண


மின் கட்டண உயர்வை சமாளிக்க முடியாத சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் வரும் செப்டம்பர் 25ம் தேதி ஆன நாளை ஒருநாள் வேலைநிறுத்த போராட்டம் நடத்த உள்ளது. இந்த போராட்டத்தை அரசு வழக்கமானதாக எடுத்துக் கொள்ளாமல் இதற்கான நிரந்தர தீர்வை அளிக்க வேண்டும். தமிழகத்தின் வளர்ச்சியையும் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சியையும் தனியாக பிரித்துப் பார்க்க முடியாது. தமிழகத்தின் பொருளாதாரத்தை அதிகரிக்க இலக்கு நிர்ணயித்துள்ள தமிழக அரசு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

தொழில் நிறுவனங்களின் வீழ்ச்சியில் இருந்து காப்பாற்றும் நோக்கத்தோடு அரசு அதன் பிரதிநிதிகளை அழைத்து மின் கட்டண குறைப்பு போன்ற முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மின் கட்டண உயர்வு காரணமாக வணிக நிறுவனங்களின் பாதிப்பானது தமிழகத்தின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் பாதிக்கக்கூடிய நிலை உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Tags :