Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 12ம் வகுப்பு பொதுத்தேர்வு .. நாளை ஹால் டிக்கெட் வெளியிடப்படுவதாக தேர்வுத்துறை தெரிவிப்பு

12ம் வகுப்பு பொதுத்தேர்வு .. நாளை ஹால் டிக்கெட் வெளியிடப்படுவதாக தேர்வுத்துறை தெரிவிப்பு

By: vaithegi Tue, 03 Jan 2023 2:31:38 PM

12ம் வகுப்பு பொதுத்தேர்வு    ..   நாளை ஹால் டிக்கெட் வெளியிடப்படுவதாக தேர்வுத்துறை தெரிவிப்பு

சென்னை: ஹால் டிக்கெட் நாளை வெளியீடு ... 2022- 23 கல்வியாண்டிற்கான 12ம் வகுப்பு பொதுத் தேர்விற்கான கால அட்டவணையை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கடந்த நவம்பர் மாதம் 07ம் தேதி வெளியிட்டார்.அதன்படி, மார்ச் 13 முதல் ஏப்ரல் 3 வரை 12ம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறுகிறது.

நடப்பாண்டுக்கான, 12ம் வகுப்பு பொது தேர்வை சுமார் 8 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர். இதனையொட்டி அடுத்த மாதம் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு நடைபெற உள்ளது.

department of examination,public examination ,தேர்வுத்துறை ,பொதுத்தேர்வு

இதையடுத்து இந்த நிலையில், தமிழகத்தில் 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் நாளை வெளியாக உள்ளது.

எனவே நாளை பிற்பகல் 2 மணி முதல் தேர்வுத் துறை இணையதளத்தில் இருந்து மாணவர்களின் ஹால் டிக்கெட்டுகளை அனைத்து பள்ளிகளும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தமிழக தேர்வுத்துறை அறிவித்து உள்ளது.


Tags :