Advertisement

கீழடியில் அகழ் வைப்பகம் பணிகள் நிறைவு

By: Nagaraj Sun, 12 June 2022 10:56:25 PM

கீழடியில் அகழ் வைப்பகம் பணிகள் நிறைவு

திருப்புவனம்: அகழ் வைப்பகம் பணிகள் நிறைவு... கீழடியில் 11 கோடியே மூன்று லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள அகழ் வைப்பக பணிகள் நிறைவு பெற்றதையடுத்து விரைவில் திறக்கப்பட உள்ளது.

சிவகங்கை மாவட்டம் கீழடியில் இரண்டு ஏக்கரில் பத்து தனித்தனி கட்டடங்களுடன் பாரம்பரியம் மிக்க செட்டி நாடு கட்டட கலை பாணியில் அகழ் வைப்பகம் கட்டப்பட்டுள்ளது. bvதமிழக தொல்லியல்துறை அகழாய்வில் கண்டறியப்பட்ட தங்கம், சுடுமண், பானை ஓடுகள், வரி வடிவ எழுத்துகள், முதுமக்கள் தாழி உள்ளிட்டவற்றை தனித்தனி கட்டடங்களில் வகைப்படுத்தி பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கும்வண்ணம் காட்சிப்படுத்தப்பட உள்ளது.

அகழாய்வு பணி குறித்த காட்சி உள்ளிட்டவை ஒலி, ஒளிபரப்ப காட்சி கூடமும் குளிர்சாதன வசதியுடன் கட்டப்பட்டுள்ளது. பணிகள் நிறைவு பெற்றது. இதில் கண்டறியப்பட்ட பொருட்களை தனித்தனி கட்டடங்களில் வைக்கும் பணி தொடங்க உள்ளன.

excavation deposit,completion,bottom,pool,water ,அகழ் வைப்பகம், நிறைவு, கீழடி, தெப்பக்குளம், தண்ணீர்

அதன்பின் முதல்வர் அகழ்வைப்பகத்தை திறந்து வைத்து பொருட்களை பார்வையிட உள்ளார்.

பொதுப்பணித்துறையினர் கூறுகையில், 2600 ஆண்டுகளுக்கு முந்தைய பொருட்களை காட்சிப்படுத்த உள்ளதால் அதற்கு ஏற்றாற்போல கட்டடம் வடிவமைக்கப்பட்டுள்ளது. செட்டி நாட்டு கட்டட கலை பாணியில் கட்டடம் கட்டப்பட்டதுடன் ஆத்தங்குடி பூ கற்கள் தரையில் பதிக்கப்பட்டுள்ளது.

மின் விளக்குகள் அனைத்தும் பழங்கால வடிவமைப்புடன் மேற்கூரை, பக்கவாட்டு பகுதி, தலைப்பகுதி உள்ளிட்டவற்றில் பதிக்கப்பட்டுஉள்ளது. இரவு வரை அகழ்வைப்பகம் திறந்திருக்க வாய்ப்பு உள்ளதால் அதற்கு ஏற்றவாறு இரவிலும் தெளிவாக பார்க்கும் வண்ணம் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் ஓய்வெடுக்க நான்கு திசைகளிலும் மாடம் அமைக்கப்பட்ட தண்ணீர் நிரப்பப்பட்ட தெப்பக்குளம் உருவாக்கப்பட்டு உள்ளது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கவரும் வண்ணம் இந்த அகழ் வைப்பகம் இருக்கும் என தெரிவித்தனர்.

Tags :
|
|