Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அமெரிக்காவில் கொரோனா வைரசை போல தீவிர இடதுசாரிகளும் தோற்கடிக்கப்படுவார்கள் - ஜனாதிபதி டிரம்ப்

அமெரிக்காவில் கொரோனா வைரசை போல தீவிர இடதுசாரிகளும் தோற்கடிக்கப்படுவார்கள் - ஜனாதிபதி டிரம்ப்

By: Karunakaran Mon, 06 July 2020 3:03:41 PM

அமெரிக்காவில் கொரோனா வைரசை போல தீவிர இடதுசாரிகளும் தோற்கடிக்கப்படுவார்கள் - ஜனாதிபதி டிரம்ப்

அமெரிக்காவின் 244-வது சுதந்திர தினம் ஜூலை 4-ஆம் தேதி கொண்டாடப்பட்டது. வழக்கமாகச் சுதந்திர தின விழாவை வாணவேடிக்கைகளோடும், அமெரிக்க படைகளின் அணிவகுப்போடும் மக்கள் கோலாகலமாகக் கொண்டாடுவர். நாட்டின் அனைத்து வீதிகளிலும் தேசியக்கொடியுடன் மக்கள் வலம் வருவர்.

தற்போது அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக உள்ளதால் இந்த ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டங்கள் களையிழந்தன. எளியமுறையில் 5 நிமிடங்கள் மட்டும் வாணவேடிக்கை, கடற்கரையில் சிறியளவிலான படைகளின் அணிவகுப்பு என சுதந்திர தின கொண்டாடப்பட்டது. சுதந்திரதினத்தையொட்டி ஜனாதிபதி டிரம்ப் வெள்ளை மாளிகையின் முன்பு திறந்த வெளியில் நாட்டு மக்களிடம் உரையாற்றினார்.

coronavirus,america,president trump,extreme left ,கொரோனா வைரஸ், அமெரிக்கா, ஜனாதிபதி டிரம்ப்,  இடதுசாரி

அப்போது உரையாற்றிய டிரம்ப், உலகின் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவு அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதற்குக் காரணம் இங்கு எடுக்கப்படும் சோதனைகள்தான். நம் நாட்டில் கொரோனாவுக்கான மிகச் சிறந்த சோதனை வசதிகள் உள்ளன. கொரோனாவுக்கு எதிரான உயிர்காக்கும் சிகிச்சை மற்றும் தடுப்பு மருந்து ஆகியவற்றை நாம் விரைவில் வெளியிடுவோம் என்று கூறினார்.

மேலும் அவர், கொரோனா வைரசை தோற்கடிப்பது போலவே தீவிர இடதுசாரிகள், மார்க்சிஸ்டுகள், அராஜக வாதிகள், கிளர்ச்சியாளர்கள், பல சந்தர்ப்பங்களில் தாங்கள் என்ன செய்கிறோம் என்பதை அறியாமல் தவறு செய்பவர்கள் ஆகியோரை தோற்கடிக்கும் முயற்சியிலும் நாம் ஈடுபட்டுள்ளோம் என்று கூறினார். அவர் உரையாற்றிக் கொண்டிருந்தபோது, அவரது உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து பலரும் அங்கு போராட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :